WhatsApp Group Join Now

Telegram Group Join Now

Pongalur Recruitment in 2023: பொங்கலூர் அரசு வேலை வாய்ப்புகள்!

Pongalur Recruitment in 2023: திருப்பூர் மாவட்டத்தில் பல ஊராட்சிகளில் அரசு வேலை வாய்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்தில் அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் மற்றும் இரவு காவலர் பணியதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிப்புகள் வந்துள்ளது:

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய தலைப்பில் உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் காண பணியிடத்திற்கான விண்ணப்பம் அலுவலக நேரங்களில் காலை 10 மணி முதல் மாலை 5:45 மணிக்குள் பெறப்படும். கடைசி தேதியாக 26/12/2023 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Pongalur Office Assistant Recruitment in 2023: இதில் அலுவலக உதவியாளர் வேலைக்கு 15700 முதல் 50 ஆயிரம் வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஊதிய நிலை ஒன்று அடிப்படையில் வழங்கப்படும்.

18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதற்கு ஒரு காலி பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் என்பது கூடுதல் தகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Pongalur Night Watchman Recruitment in 2023: இரவு காவலர் பணியிடத்திற்கும் மேலே குறிப்பிட்ட அதே 15,700 முதல் அம்பதாயிரம் வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வயதாக 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது கணக்கிடப்படும் நாளாக 01/07/2023 அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலை வாய்ப்புக்கு நீங்கள் விண்ணப்பிக்க விரும்பினால் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும். இதற்கும் ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கவனிக்க: இந்த பொங்கலூர் அரசு வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அலுவலக நேரங்களில் நேரில் சமர்ப்பிக்கலாம், அல்லது தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தபால் மூலம் விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் ஆணையாளர் ஊராட்சி ஒன்றியம் பொங்கலூர் என்ற முகவரிக்கு தபால்களை அனுப்பி வையுங்கள். விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து சரியாக பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும், படிவத்தை பதிவிறக்கம் செய்ய இந்த பகுதியை கிளிக் செய்யுங்கள். அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்து பார்க்க விரும்பினால் இந்த பகுதியை கிளிக் செய்யுங்கள்.

திருப்பூர் மாவட்ட மற்ற யூனியன் அலுவலக வேலையவைப்புகள்

கூடுதல் வேலைவாய்ப்பு

இன்ற வேலையவாய்ப்பு
Tamilnadu Jobs Indian Army
TN Government Jobs Central Government Jobs
12th Pass Jobs 5th Pass Jobs
8th Pass Jobs Degree Pass Jobs
10th Pass Jobs Railway Jobs

Leave a Reply