WhatsApp Group Join Now

Telegram Group Join Now

Kangayam Recruitment in 2023: காங்கயம் அரசு வேலை வாய்ப்புகள்!

Kangayam Recruitment in 2023: திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஊராட்சியில் உள்ள இரவு காவலர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடத்தை நேரடி நியமனம் மூலம் நிரப்பும் பொருட்டு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு சம்பந்தமான முழு விளக்கங்களை படித்து பார்த்து, தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Kangayam Office Assistant Recruitment in 2023: திருப்பூர் மாவட்ட வளர்ச்சி, மற்றும் ஊராட்சி அலகில் உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு தற்போது ஒரு காலி பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் மிதிவண்டி ஓட்ட தெரிந்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். இதற்கு 15,700 முதல் 50,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். உங்கள் வயது 01/07/2023 அன்று உள்ளவாறு கணக்கிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் தபால் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம், நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பவர்கள் ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், காங்கயம் என்ற முகவரிக்கு உங்கள் விண்ணப்ப படிவத்தை 26/12/2023க்குள் அனுப்பி வையுங்கள்.

Kangayam Night Watchman Recruitment in 2023 அறிவிப்பு: இரவு காவலர் பணியிடத்தை பொருத்தவரை இது திருப்பூர் மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், காங்கயம் ஊராட்சி ஒன்றிய தலைப்பில் உள்ள பணியிடமாகும்.

இதற்கும் நீங்கள் 26/12/2023க்குள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். இந்த வேலைவாய்ப்புக்கு எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்க முடியும் என்பது சிறப்பம்சம்.

மேலும் இதற்க்கு 15,700 முதல் 50,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஊதிய லெவல் ஒன்றின் அடிப்படையில் சம்பளம், இதர படிகள் வழங்கப்படும்.

உங்களுடைய வயது 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயதை தாண்டாமல் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.நீங்கள் அலுவலக நேரங்களில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்,.

கவனிக்க: இந்த காங்கயம் அரசு வேலையவாய்ப்புகளுக்கான உங்கள் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் அது குறித்த தேதி உங்களுக்குப் பின்னர் லெட்டர் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

நீங்கள் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், காங்கயம் என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய இந்த பகுதியை கிளிக் செய்யுங்கள். அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்து பார்க்க இந்த பகுதியை கிளிக் செய்யுங்கள்.

குறிப்பு: இரண்டு காங்கயம் அரசு வேலைகளுக்கும் ஒரே அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் படிவம் மூலம் விண்ணப்பிக்கும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையால் விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து அனுப்புங்கள்.

திருப்பூர் மாவட்ட மற்ற யூனியன் அலுவலக வேலையவைப்புகள்

கூடுதல் வேலைவாய்ப்பு

இன்ற வேலையவாய்ப்பு
Tamilnadu Jobs Indian Army
TN Government Jobs Central Government Jobs
12th Pass Jobs 5th Pass Jobs
8th Pass Jobs Degree Pass Jobs
10th Pass Jobs Railway Jobs

Leave a Reply