WhatsApp Group Join Now

Telegram Group Join Now

சென்னை அமேசான் நிறுவனத்தில் புதிதாக வேலை வாய்ப்பு!

சென்னையில் உள்ள அமேசான் நிறுவனத்தில் புதிதான (Device Associate, Quality Services, Device Tech Support) வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது இந்த மாதத்தில் இரண்டாவது அமேசான் வேலை வாய்ப்பு என்பது உண்மை.

ஆம், நாங்கள் ஏற்கனவே Data Scientist மற்றும் Digital Acceleration அமேசான் வேலை வாய்ப்பு பற்றிய கட்டுரை வெளியிட்டோம், அதையும் நீங்கள் பார்க்கலாம், அதற்கு இந்த பகுதியை கிளிக் செய்யுங்கள்.

New job opportunity in Chennai Amazon 2023
Amazon jobs In Tamil Nadu

தற்போது வெளியிடப்பட்ட இந்த Job ID: 2484660 வேலைவாய்ப்பின் அடிப்படையில் முக்கியமான மூன்று பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளது, இந்த மூன்று பதவிகளுக்கான காலி பணியிடங்கள் பற்றி முழுமையாக அறிவிக்கவில்லை என்றாலும் இது சென்னையில் இயங்கி வரக்கூடிய அமேசான் அலுவலக வேலைவாய்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

அதோடு பெரும்பாலும் அனைவருமே அமேசான் வேலைவாய்ப்புக்காக ஆர்வமாக உள்ளார்கள். எனவே தான் நாங்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுத்த அமேசான் வேலைவாய்ப்பு பற்றிய கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறோம்.

அந்தவகையில் இந்த கட்டுரையின் வேலை அடிப்படையில் சோதனை திட்டங்கள், மற்றும் சோதனை நிகழ்வுகளை செயல்படுத்துதல், சோதனை தரவுகளை உருவாக்குதல் போன்ற வேலைகளில் நீங்கள் ஈடுபட வேண்டும்.

மேலும் வேலைவாய்ப்பு பற்றிய திட்டம், அதன் தயாரிப்பு, அதன் செயல்பாடு பற்றிய நல்ல புரிதலை கொண்டிருக்க வேண்டும். மேலும் சேவைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கவும், மாறிவரும் தேவைகள் மற்றும் ஆவணங்களுடன் அமேசான் நிறுவனத்துடன் இணையந்து செயல்படவும் ஒரு நல்ல திறமைசாலி தேடிக் கொண்டிருக்கிறது.

திறன்:

ஆம் மூன்று பிரிவுகளில் வழங்கப்படும் இந்த வேலைகளில் நீங்கள் சென்னையில் உள்ள அமேசான் அலுவலகத்தில் இருக்கும் பிழைகளையும் கண்டுபிடிக்கும் அளவு திறன் பெற்று இருக்க வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தயாரிப்பு மாற்றங்களை முழுமையாக சோதிக்கும் செயல்முறைகளும் நீங்கள் செயல்படுத்த வேண்டி இருக்கும். அதோடு நான் சொன்னது போல் பிழைகள், சிக்கல்கள் மூலம் உருவாகும் பிரச்சனைகளை பின்னுக்குத் தள்ளும் நல்ல திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

இந்த வேலை சென்னையில் வழங்கக்கூடிய வேலை என்று நாம் ஆரம்பத்தில் இருந்து பேசிக் கொண்டு வருகிறோம், ஆகையால் தேர்வு செய்யப்படும் நபர்கள் சென்னையில் உள்ள அமேசான் அலுவலகத்தில் தான் வேலையில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

தகுதி:

இதற்கு அடிப்படை தகுதியை பொருத்தவரை இளநிலை பட்டம், மற்றும் QA முறை மற்றும் கருவிகள் பற்றிய அறிவு தேவைப்படுகிறது. விரும்பத்தக்க தகுதிகளில் பி.இ., பி.டெக். ,எம்எஸ்சி ஐடி மற்றும் எம்சிஏ போன்ற விஷயங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அதோடு நல்ல தொடர்பு கொள்ளும் திறன் இருக்க வேண்டும், அறிவு சார்ந்த விஷயங்களில் நல்ல திறன் பெற்ற மனிதராகவும், நல்ல பகுத்தாய்வு திறன் கொண்டவராகவும் இருக்க வேண்டும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Job ID: 2484660 வேலைக்கு விண்ணப்பிக்கும் தகவல்:

இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் முறை பொருத்தவரை நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆம், விண்ணப்பிப்பதற்கான இறுதித் தேதி அறிவிக்கப்படவில்லை, இருந்தபோதும் உங்கள் ஆவணங்கள் அனைத்தையும் ஆன்லைன் மூலம் நீங்கள் ரிஜிஸ்டர் செய்து விண்ணப்பிக்க முடியும். உங்களுக்கான நேர்காணல் தேதி மின்னஞ்சல் மூலமாக அறிவிக்கப்படலாம் என்று கருதுகிறோம்.


TIDEL Park, 4th Floor Infinity Tower, Tata, Ramanujan IT City, SEZ, Rajiv Gandhi Salai, near Taramani, Chennai, Tamil Nadu 600113

எனவே இந்த வேலை வாய்ப்பு சம்பந்தப்பட்ட முழு விளக்கத்தையும் தெளிவாக பார்த்த பயன்பெறுங்கள். வேலைக்கு விண்ணப்பிக்கக்கூடிய வாய்ப்பை பெற்றிடுங்கள், எங்கள் மூலம் வருங்காலத்தில் வரும் வேலைவாய்ப்பில் விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பை பெறுவதற்காகவும் தொடர்ந்து எங்கள் குழுவில் இணைந்திருங்கள் உங்கள் வருகைக்கு நன்றி.

கூடுதல் வேலைவாய்ப்பு

இன்ற வேலையவாய்ப்பு
Tamilnadu Jobs Indian Army
TN Government Jobs Central Government Jobs
12th Pass Jobs 5th Pass Jobs
8th Pass Jobs Degree Pass Jobs
10th Pass Jobs Railway Jobs

Leave a Reply