Udumalpet Recruitment in 2023: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் புதிதான அரசு வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அடிப்படையில் திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் உள்ள உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தலைப்பில் ஊதியம் வழங்கப்படும் இரவு காவலர் பணி.
இந்த உடுமலைப்பேட்டை அரசு வேலை இடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்புகள் வந்துள்ளது. இந்த அறிவிப்பின் அடிபடையில் 26/12/2023க்குள் உங்களுடைய விண்ணப்பங்கள் அலுவலகத்தை சென்றடைய வேண்டும்.
Udumalpet Night Watchman Recruitment in 2023: பதவியின் பெயர் இரவு காவலர். அதிகபட்ச ஊதியமாக 50,000 குறைந்தபட்ச ஊதியமாக 15,700 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதர படிகளுடன் இந்த ஊதிய நிலை 1 அடிப்படையில் இது உங்களுக்கு வழங்கப்படும்.
மேலும் 18 வயது வேண்டும், வயது கணக்கெடுக்கப்படும் நாள் 01/07/2023 என்பது குறிப்பிடத்தக்கது. வகுப்புவாரியான தகவல்களுக்கு நீங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.
மொத்த காலி பணியிடங்கள் ஒன்று மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வி தகுதியை பொருத்தவரை எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும்.
விண்ணப்பம்: கடைசி நாள் முடிவதற்கு உங்கள் விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து அலுவலகம் நேரங்களில் நீங்கள் நேரில் அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம். தபால் மூலமாக அனுப்ப விரும்பும் நபர்கள் ஆணையாளர் ஊராட்சி ஒன்றியம் உடுமலைப்பேட்டை என்ற முகவரிக்கு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்புங்கள்.
கவனிக்க: முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய இந்த பகுதியை கிளிக் செய்யுங்கள். விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய இந்த பகுதியை கிளிக் செய்யுங்கள்.
தமிழில் எழுதப் படிக்க தெரிந்தவர்களின் தொடங்கி, பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை பதிவு செய்யக் கூடிய சிறந்த அரசாங்க வேலைகளை நமது தமிழ் உறவுகளுக்காக தமிழ்மொழியில் தினமும் வழங்கி வருகிறோம்.
உங்கள் ஆதரவு எங்களுக்கு தொடர்ந்து தேவைப்படுகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம், ஒரு வாட்ஸ்அப் குரூப்பிலாவது இதை பகிர்ந்து பிறருக்கும் நன்மை செய்து, தமிழக வேலையைப் தமிழனுக்கே பெற்றுத்தர உதவிக்கரம் நீட்டுவோம்.