WhatsApp Group Join Now

Telegram Group Join Now

Tiruppur Recruitment in 2023: திருப்பூர் அரசு வேலை வாய்ப்புகள்!

Tiruppur Recruitment in 2023: திருப்பூர் மாவட்டம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அலுவலக வேலை வாய்ப்புகளுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அலுவலக உதவியாளர் பணியிடத்தை நிரப்பும் பொருட்டு திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி தலைப்பில் உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான விண்ணப்பம் 26/12/2023 வரை அலுவலக வேலை நாட்களில் விண்ணப்பம் பெறப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்புக்கு 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். உங்களுடைய வயது 01/07/ 2023 அடிப்படையில் கணக்கிடப்படும்.

Tiruppur Office Assistant Recruitment in 2023: வேலைக்கு ஒரு காலி பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகுதியாக சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விடுக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமில்லாமல் இந்த காலி பணியிடத்திற்கு மாத சம்பளமாக 15.700/- குறைந்தபட்சமாகவும், அதிகபட்சமாக 50,000/- வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு விதிகளின்படி இந்த ஊதியம் உங்களுக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகையால் அலுவலக நேரங்களில் உங்களுடைய விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க தவறாதீர்கள். இந்த வேலைக்கு விருப்பமாக உள்ள நபர்கள் ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம் திருப்பூர் என்ற முகவரிக்கு நீங்கள் தபால்களை அனுப்பலாம்.

கவனிக்க: அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. தகுதியை பூர்த்தி செய்யும் நபர்கள் விண்ணப்பிக்க ஆர்வமாக இருந்தால் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய இந்த பகுதிக்கு செல்லலாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய இந்த பகுதியை கிளிக் செய்யுங்கள்.

திருப்பூர் மாவட்ட மற்ற யூனியன் அலுவலக வேலையவைப்புகள்

கூடுதல் வேலைவாய்ப்பு

இன்ற வேலையவாய்ப்பு
Tamilnadu Jobs Indian Army
TN Government Jobs Central Government Jobs
12th Pass Jobs 5th Pass Jobs
8th Pass Jobs Degree Pass Jobs
10th Pass Jobs Railway Jobs

Leave a Reply