Mulanur Recruitment in 2023: திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஊராட்சி ஒன்றியத்தில் இரவு காவலர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் அடிப்படையில் திருப்பூர் மாவட்ட வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் உள்ள மூலனூர் ஊராட்சி ஒன்றிய தலைப்பில் இருக்கும் அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரும் 26/12/2023 வரை அலுவலக வேலை நாட்களில் பெறப்படும். இந்த வேலை வாய்ப்புக்கான முழு விவரங்களை இந்த கட்டுரையில் பாருங்கள்.
Mulanu Office Assistant Recruitment in 2023: முதலில் அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது. இதற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் மிதிவண்டி ஓட்ட தெரிந்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
இதற்கு மாத சம்பளமாக 15,700 முதல் 50,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வயது வரம்பு 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் என்பதும் நிபந்தனையாகும்.
Mulanu Night Watchman Recruitment in 2023: அடுத்தபடியாக இரவு காவலர் பணியிடத்திற்கும் இதே சம்பள முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது 15,700 முதல் 50,000 வரை.
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும். இந்த இரவு காவலர் வேலைக்கும் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
தபால் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம், நேரில் சென்று நீங்கள் விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடதக்கது. விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து 26/12/2023க்குள், அலுவலகத்தை சென்றடையும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் இந்த விண்ணப்பத்தை நீங்கள் தபால் மூலம் அனுப்ப விருப்பப்பட்டால் ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், மூலனூர் முகவரிக்கு பதிவு தபால் மூலம் அனுப்பலாம்.
அவ்வாறு அனுப்ப ஆசைப்படும் நபர்கள் விண்ணப்ப படிவத்தை முதலில் பதிவிறக்கம் செய்ய வேண்டும், அதற்கு இந்த பகுதியை கிளிக் செய்யுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பை, அதாவது இரவு காவலர் மற்றும் அலுவலக உதவியாளருக்கான அறிவிப்பை படித்து பார்க்க விரும்பினால் இந்த பகுதியை கிளிக் செய்யுங்கள்.
கவனிக்க: தகுதி உள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து விவரங்கள் தனியாக கடிதம் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
தமிழில் எழுதப் படிக்க தெரிந்தவர்களின் தொடங்கி, பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை பதிவு செய்யக் கூடிய சிறந்த அரசாங்க வேலைகளை நமது தமிழ் உறவுகளுக்காக தமிழ்மொழியில் தினமும் வழங்கி வருகிறோம்.
உங்கள் ஆதரவு எங்களுக்கு தொடர்ந்து தேவைப்படுகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம், ஒரு வாட்ஸ்அப் குரூப்பிலாவது இதை பகிர்ந்து பிறருக்கும் நன்மை செய்து, தமிழக வேலையைப் தமிழனுக்கே பெற்றுத்தர உதவிக்கரம் நீட்டுவோம்.