Madathukulam Recruitment in 2023: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரசு காலி பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் அடிப்படையில் அலுவலக உதவியாளருக்கான வேலைவாய்ப்பும், மற்றும் ஈப்பு ஓட்டுநர் எனும் டிரைவர் காலி பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகையால் உங்கள் விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து தபால் மூலமாக அனுப்பலாம். மேலும் அலுவலக நேரங்களில் நீங்கள் நேரில் சமர்ப்பிக்கலாம். சமர்ப்பிப்பதற்கான இறுதி தேதி 26/12/2023 ஆகும். இது சம்பந்தமான விளக்கங்களை தெரிந்து கொண்டு உடனே விண்ணப்பிக்கும்மாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Madathukulam Office Assistant Recruitment in 2023: முதலில் மடத்துக்குளம் அலுவலக உதவியாளர் இந்த பணியிடத்திற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும். கூடுதலாக சைக்கிள் ஓட்ட தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த மடத்துக்குளம் அரசு வேலைக்கான பணியிடம் இரண்டு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு மாத ஊதியமாக 15,700 முதல் அம்பதாயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆகையால் ஆர்வமும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பியுங்கள்.
Madathukulam Jeep Driver Recruitment in 2023: அடுத்தபடியாக டிரைவர் வேலை வாய்ப்பு. அதாவது ஈப்பு ஓட்டுனர் எனும் இந்த காலி பணியிடமும் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய தலைப்பில் உள்ள பணியிடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மாத ஊதியம் 19,500 முதல் அதிகபட்சமாக 62 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஊதிய லெவல் 8டின் அடிப்படையில் இதர படிகளுடன் ஏற்ற முறையில் அரசு நிர்ணயம் செய்யும் ஊதியமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தகுதியானவர், உங்கள் வயது 1/7/2023 அடிப்படையில் கணக்கிடப்படும். கூடுதல் விவரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை நீங்கள் பார்க்க முடியும்.
மடத்துக்குளம் அரசு ட்ரைவர் வேலைக்கு ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்க்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
குறிப்பு: இரண்டு அல்லது ஐந்து ஆண்டுகள் குறைந்தபட்சம் முன் அனுபவம் இருக்க வேண்டும். உங்களுடைய முன்ன அனுபவம் நடைமுறை ஓட்டுனர் அனுபவமாக இருத்தல் அவசியம்.
தற்போது இந்த தகுதிகளுக்கு நீங்கள் பூர்த்தி செய்தால் உங்களுடைய விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யுங்கள், பதிவிறக்கம் செய்ய இந்த பகுதியை கிளிக் செய்யுங்கள்.
நீங்கள் ஒருவேளை நேரில் செல்லாமல் தபால் மூலம் விண்ணப்பிக்க விரும்பினால் ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், மடத்துக்குளம் என்ற முகவரிக்கு உங்கள் விண்ணப்பத்தை அனுப்புங்கள்.
கவனிக்க: விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு நேர்காணல் நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்த விபரங்கள் பின்னர் தனியே கடிதம் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று நிர்வாகத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பை பாருங்கள்.
தமிழில் எழுதப் படிக்க தெரிந்தவர்களின் தொடங்கி, பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை பதிவு செய்யக் கூடிய சிறந்த அரசாங்க வேலைகளை நமது தமிழ் உறவுகளுக்காக தமிழ்மொழியில் தினமும் வழங்கி வருகிறோம்.
உங்கள் ஆதரவு எங்களுக்கு தொடர்ந்து தேவைப்படுகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம், ஒரு வாட்ஸ்அப் குரூப்பிலாவது இதை பகிர்ந்து பிறருக்கும் நன்மை செய்து, தமிழக வேலையைப் தமிழனுக்கே பெற்றுத்தர உதவிக்கரம் நீட்டுவோம்.