கவனிக்க: எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கக்கூடிய அரசு வேலை பாதுகாப்புகளின் முழு பட்டியல் இந்த பகுதியில் உள்ளது இது இராமநாதபுரத்தில் வெளியிடப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
ராமநாதபுரத்தில் அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கான ஒரு சிறந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆம் இதில் ஓட்டுனர் வேலை, பதிவுகளை எழுத்தர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் என்று பல காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
உண்மைதான்! இதற்கு மொத்தம் 18 பணிகள் உள்ளது. இது ஒவ்வொன்றிற்கும் தனித்தனி தகுதி தேவைப்படுகிறது, முதல் தகுதி எட்டாம் (8) வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து விண்ணப்பிக்க முடியும்.
ஆகையால் இந்த பதிவை சற்றுநேரம் நேரம் ஒதுக்கி தெளிவாக படித்து பாருங்கள், உங்களுக்கான வேலை வாய்ப்பு இதில் கட்டாயம் இருக்கக்கூடும், அல்லது உங்கள் உறவினர்கள், நண்பர்களுக்காகவும் இது உதவலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே இந்த கட்டுரையில் அறிவிப்பு சம்பந்தமான தகவலை படித்துவிட்டு வேலைவாய்ப்பை ஒவ்வொன்றையும் தனித்தனியாக தமிழ் மொழியில் தெளிவாக காணலாம் வாருங்கள்.
அறிவிப்பு: ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், அரசு தலைப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளதால் தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
அதாவது, அலுவலக உதவியாளர், வனகன் ஓட்டுநர் மற்றும் இரவு காவலர், போன்ற பணியிடங்களுக்கான 13/10/2023 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு இது. இருந்தபோதும், இதற்கு நீங்கள் வரும் 06/1/ 2023க்குள் விண்ணப்பிக்க வேண்டும், குறைந்த காலமே உள்ளதால் விரைவாக விண்ணப்பிப்பதற்கு கட்டுரையை முழுமையாக படித்து பயன்பெறுங்கள். வாருங்கள் வலைதளத்தில் பயணிக்கலாம்.
Application for the post of Driver, Record Clerk, Office Assistant and Night Watchman from Rural Development Dept, Ramanathapuram District.
டிரைவர், ரெக்கார்டு கிளார்க், அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர்.
10 காலியிடங்கள்.
ழுதப் படிக்கத் தெரிந்தவர்கள், 8ம் வகுப்பு, 10ம் தேர்ச்சி பெற்றவர்கள்.
- டிரைவர்: 19,500 – 62,000
- ரெக்கார்டு கிளார்க்: 15,900 – 50,400
- அலுவலக உதவியாளர்: 15,700 – 50,000
- இரவு காவலர்: 15,700 – 50,000
வேண்டுகோள்: ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளது என்று கட்டுரையில் நாம் விவாதித்து வருகிறோம். இதில் மொத்தம் 4 நிலைகளில் 18 அரசு காலிபணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது, இதை ஒவ்வொன்றையும் தனித்தனியாக பிரித்து தெளிவான விளக்கங்களை கொடுக்கும் முயற்சியில் கீழே பட்டியலைத்துள்ளோம் பார்த்த பயன்பெறுங்கள்.
ராமநாதபுரம் அரசு டிரைவர் வேலைவாய்ப்பு விவரம்:
ராமநாதபுரம் அரசு வலைதளத்தின் மூலம் 13/10/2023 அன்று வெளியிடப்பட்ட அரசு டிரைவர் வேலை வாய்ப்புக்கான தகுதிகளை தெளிவாக கீழே பாருங்கள்:
- பதவியின் பெயர்: ஈப்பு ஓட்டுநர் எனப்படும் வாகன ஓட்டுனர் ஆங்கிலத்தில் டிரைவர் என்று கூறுவார்கள்.
- காலி பணியிடங்கள்: இதற்கு மொத்தம் ஆறு காலி பணியிடங்கள் உள்ளது.
- வேலைக்கான ஊதியம்: இந்த வேலைக்கான ஊதியம் ஆனது 19,500 முதல் 62,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தகுதி மற்றும் விவரங்கள்:
- எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
- ஓட்டுநர் உரிமம் பெற்று 5 ஆண்டுகளுக்கு குறையாமல் மோட்டார் வாகனங்களை ஓட்டுவதில் நடவி முறை அனுபவம் பெற்று இருக்க வேண்டும், அதற்கான ஆதாரம் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும்.
வயதுவரம்பு வயது:
வரம்பு பொறுத்தவரை வகுப்புவாரியான வயது வரம்பை நீங்கள் இதில் பார்க்க முடியும், அதற்கான விவரங்களை கீழே காணுங்கள்:
- பிரிவு பொது பிரிவில் 18 வயது முதல் 32 வயதை தாண்டக்கூடாது.
- பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு 18 வயது முதல் 34 வயதை தாண்டக்கூடாது.
- ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் அருந்ததிர் போன்றவருக்கு 18 வயது முதல் 42 வயதை தாண்டக்கூடாது.
கவனிக்க: இன சுழற்சி விவரங்களை நீங்கள் அறிவிப்பில் தெளிவாக காண முடியும், அந்த அறிவிப்பை பார்க்கும் (படிக்கவும்) கட்டுரையில் கீழே உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வெளியான ரெக்கார்டு கிளார்க் எனும் பணியிடத்திற்கான விவரங்கள்:
13/10/2023 முதல் 06/11/2023 வரை விண்ணப்பிக்கக்கூடிய பதிவரை எழுத்தர் எனும் வேலைக்கான விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
வேலைக்கான காலியிடம்: ரெக்கார்டு கிளார்க்-ற்கு ஒரு காலியிடம் மட்டுமே ராமநாதபுரத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு காலி பணியிடமும் பொது போட்டி (முன்னுரிமை பெற்றவர்) கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள் போன்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
கல்வி தகுதி: இந்த பதிவரை எழுத்தர் எனும் ரெகார்ட் க்ளர்க் வேலைக்கு சேர பத்தாம் வகுப்பு நிறைவு செய்திருக்க வேண்டும் என்பது முக்கியம்.
வகுப்புவாரியான வயதுவரம்பு:
- பொது பிரிவுகளினருக்கு 18 முதல் 32.
- பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் போன்றோருக்கு 18 முதல் 34.
- ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிட அருந்ததியர் போன்றோருக்கு 18 முதல் 37.
ராமநாதபுரம் மாவட்ட அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான விவரங்கள்:
ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள, 6/11/2023க்குள் விண்ணப்பிக்கக்கூடிய அலுவலக உதவியாளர் வேலைக்கான விபரங்களை கீழே காணுங்கள்:
வேலைையின் விதம்: இந்த வேலையை பொறுத்தவரை அலுவலக உதவியாளர் வேலை. ஆம், அதாவது அலுவலகங்களில் கொடுக்கும் வேலைகளை செய்யும் ஊழியராக நீங்கள் செயல்படுவீர்கள்.
வேலைக்கான கல்வி தகுதி: வேலைக்கான கல்வி தகுதியை பொருத்தவரை எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது முக்கியம்.
வேலைக்கான காலியிடம்: இந்த வேலைக்கான காலியிடம் ஏழு ஒதுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இந்த 7 அரசு ஆபீஸ் அசிஸ்டென்ட் காலி பணியிடத்தில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் இந்த பணிக்கு கட்டாயம் விண்ணப்பியுங்கள்.
வயதுவரம்பு:
வேலைக்கான வயது வரம்பு பொறுத்தவரை ஒவ்வொரு வகுப்பினருக்கும் தனித்தனியான வயதுவரம்பு பொறிக்கப்பட்டுள்ளது, அது சம்பந்தமான தகவலை கீழே காணுங்கள்:
- பொதுப்பிரிவு 18-32
- பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்பண்ண மரபினர் 18-34
- ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிட அருந்ததியர் 18-37
கவனிக்க: பொதுப்போட்டி, முன்னுரிமை, கொரோனாவால் தாய் தந்தையை இழந்தவர் போன்றவர்களின் இட ஒதுக்கீடு தெரிந்து கொள்ள மற்றும் முன்னுரிமையை தெரிந்து கொள்ள வலைதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள், அது கூடுதல் விவரங்களை வழங்கும் என்று நாங்கள் கருதுகிறோம். இருந்தபோதும் தேவைப்பட்டால் எங்களிடமும் கருத்துபெட்டியில் நீங்கள் விவரங்களை கேட்டறியலாம்.
ராமநாதபுரம் அரசு இரவு காவலர் பணியிடத்திற்கான விவரங்கள்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் தபால் மூலம் 06/11/2023 பிற்பகல் 5:45 மணிக்குள் விண்ணப்பிக்க கூடிய இரவு காவலர் பணியிடத்திற்கான விவரங்களை கீழே காணுங்கள்:
- வேலையின் விதம்: இந்த வேலை இரவு காவலர், அதாவது ஆங்கிலத்தில் வாட்ச்மேன் என்று கூறுவார்கள்.
- பணியிடங்கள்: இந்த வேலைக்கான காலிப்பணியிடத்தை பொருத்தவரை நான்கு (4) காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது, இதற்கு கட்டாயம் விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி: இந்த இரவு காவலர் வேலைக்கான கல்வி தகுதியை பொறுத்தவரை எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். அதாவது குறைந்த கல்வி தகுதி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்க கூடிய வேலை இது என்பது குறிப்பிடத்தக்கது.
வயதுவரம்பு வயது:
வரம்பு பொறுத்தவரை எப்போதும் போல் ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளது, அதை தெளிவாக காணுங்கள்:
- பொது பிரிவினருக்கு 18 முதல் 32.
- பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு 18 முதல் 34.
- ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிட அருந்ததியர், இவர்களுக்கு 18 முதல் 37.
கவனிக்க: வயது வரம்பை பொருத்தவரை இரவு காவலர், அலுவலக உதவியாளர், பதிவிற எழுத்தர் போன்ற பணியிடங்களுக்கு ஒரே வயது வரம்பை நம்மால் பார்க்க முடிகிறது. இருந்த போதும் ஒவ்வொன்றையும் தெளிவாக மறுமுறை பார்த்து பதிவு செய்யுங்கள் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். மேலும் கூடுதல் விவரங்கள், முன்னுரிமை போன்ற விவரங்களை அறிவிப்பில் நீங்கள் பார்க்க முடியும்.
முக்கிய அறிவிப்பு: முன்னுரிமை பெற்றவர் எனில் அரசாணை எண் 122 மனிதவள மேலாண்மை துறை நாள் 02/11/2021-இல் தெரிவித்துள்ள அறிவுறுத்தல்கள் படி பின்பற்றப்படும். அதாவது வேலை வாய்ப்பு அறிவிப்பில் முன்னுரிமை பெற்றவர்களுக்கான ஒதுக்கப்பட்ட இடங்கள் இந்த வழிமுறையை பின்பற்றி பணியமர்த்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் அரசு வேலைக்கான நிபந்தனைகள்:
- விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி, இருப்பிட சான்று, முன்னுரிமை சான்று, மற்றும் இதர சான்றுகள் போன்றவைகளுக்கு ஆதாரம் இணைத்து அனுப்பப்பட வேண்டும். காரணம் இது தபால் மூலம் விண்ணப்பிக்கக்கூடிய வேலை.
- இன சுழற்சி, வயது வரம்பு, மற்றும் கல்வித் தகுதியற்ற நபர்களிடமிருந்து வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் காலியிடங்கள் அறிவிக்கப்பட்ட மாவட்டத்தில் வசிப்பவர்களாக மட்டும் இருக்க வேண்டும்.
- தகுதியுள்ள விண்ணப்பங்களுக்கு நேர்காணல் நடைபெறும் நடைபெறும் விவரங்கள் தனித்தனியே அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
- இந்த ராமநாதபுரம் மாவட்ட அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பை ரத்து செய்வதற்கான அனைத்து அதிகாரமும் நியாயமான அலுவலகத்திற்கு உண்டு.
கவனிக்க: மேலே பார்த்த நிபந்தனைகள் அனைத்துமே அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ராமநாதபுரத்தில் 60/11/2023-க்குள் விண்ணப்பிக்க கூடிய அரசு வேலைகளுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
நீங்கள் அலுவலக வேலை நாட்களில் வரும் 06/11/2023 பிற்பகல் 5:45 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரில் சமர்ப்பிக்கலாம். அல்லது தபால் மூலம் விண்ணப்பிக்க விருப்பப்பட்டால் அதற்கான விலாசத்தையும் அறிவிப்பில் அரசு கொடுத்துள்ளது அந்த விலாசத்தை கீழே காணுங்கள் விண்ணப்பங்கள்.
சமர்ப்பிக்க வேண்டிய விலாசம்: மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், (வளர்ச்சி) மாவட்ட ஆட்சியரகம் (வளர்ச்சி பிரிவு) முதல் தளம், ராமநாதபுரம் மாவட்டம் 62 350 4.
வணக்கம் நண்பர்களே! எங்களால் முடிந்த வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் வெளியான அரசு வேலை வாய்ப்புகளுக்கான முழு விளக்கத்தையும் தமிழ் மொழியில் தெளிவாக கொடுத்திருக்கிறோம் என்று நம்புகிறோம்.
ஒருவேளை இதில் ஏதேனும் தவறு நிகழ்ந்திருந்தால் மன்னித்து விடுங்கள். மேலும் அதற்கான விபரங்களை எங்களிடம் கீழே கருத்து பெட்டியில் கேட்டு தீர்த்துக் கொள்ளலாம். மேலும் வருங்கால சிறந்த கட்டுரைகளுக்காகவும் உங்கள் வழிகாட்டுதலையும் நாங்கள் எதிர்பார்க்கும் காரணத்தினால் அந்த கருத்தையும் பதிவிடலாம்.
தற்போது உங்கள் வருகைக்கும் பொறுமையான இந்த வாசிப்பிற்கும் நன்றி. மேலும் நீங்கள் விருப்பப்பட்டால் உங்கள் நண்பர்களுக்கு இதை பகிரலாம் என்று ஒரு வேண்டுகோளாக கேட்டுக்கொள்கிறோம்.
தமிழில் எழுதப் படிக்க தெரிந்தவர்களின் தொடங்கி, பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை பதிவு செய்யக் கூடிய சிறந்த அரசாங்க வேலைகளை நமது தமிழ் உறவுகளுக்காக தமிழ்மொழியில் தினமும் வழங்கி வருகிறோம்.
உங்கள் ஆதரவு எங்களுக்கு தொடர்ந்து தேவைப்படுகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம், ஒரு வாட்ஸ்அப் குரூப்பிலாவது இதை பகிர்ந்து பிறருக்கும் நன்மை செய்து, தமிழக வேலையைப் தமிழனுக்கே பெற்றுத்தர உதவிக்கரம் நீட்டுவோம்.