அரசியலில் ஒதுங்கியிருந்த சசிகலா மீண்டும் தன் அரசியலுக்கு வரப்போவதாக தெரிவித்து வருகின்றார்.
அதன் ஒருபகுதியாக அக்டோபர் 16, 17 ஆகிய தேதிகளில் ஜெ நினைவிடம், எம்ஜிஆர் நினைவில்லம் ஆகியவற்றுக்கு சென்று வந்ததோடு,
அதிமுக கொடியை ஏற்றியது, பொதுச் செயலாளர் என தனது பெயரை போட்டு கல்வெட்டு அமைத்தது என மீண்டும் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் சசிகலா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘அதிமுக என்ற கட்சி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் வழிகாட்டுதலின் பெயரில் நடைபெற்று வருவதாகவும்,
தொண்டர்களிடையே ஒருவிதமான குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் சசிகலா தவறான எண்ணத்தில் செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர்களாக இருக்கக்கூடிய ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிச்சாமி, அவைத்தலைவர் ஆகியோரிடம்தான் கட்சிக்கு உரிமை உள்ளது என்று டெல்லி உயர் நீதிமன்றமும், இந்திய தேர்தல் ஆணையமும் தெரிவித்துள்ளது .
கட்சியில் வீண் குழப்பத்தை ஏற்படுத்தவே சசிகலா இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.
காவல்நிலையத்தில் புகார் அளிக்க வரும்பொழுது மாம்பலம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் இல்லாத நிலை இருப்பதாகவும், புகார் அளித்த பிறகு புகாரைப் பெற்றதற்கான சிஎஸ்ஆர் எனப்படும் ஒப்புகை சீட்டை கூட தராமல் இருட்டடிப்பு செய்வதாக குற்றம் சாட்டினார்.
தமிழகத்தில் முன்னாள் அமைச்சருக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களுக்கு என்ன நிலை என்றும் கேள்வி எழுப்பினார்.
திமுகவும், சசிகலாவும் கைகோர்த்து அதிமுகவில் பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் சாமானிய மக்களுக்கும் காவல்துறைக்கும் உரிய மரியாதையும் பாதுகாப்பும் இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
அதிமுக ஆட்சியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட அம்மா உணவகத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களை பணிநீக்கம் செய்துவிட்டு, திமுகவினரை பணியில் அமர்த்த திமுக அரசு ஈடுபடுவதாக குற்றம் சாட்டினார்.
அம்மா உணவகத்தை மூடலாம் என்று திமுக அரசு நினைத்தால் அதற்கான தகுந்த நடவடிக்கையை அதிமுக எடுக்கும் என்றும் ஜெயக்குமார் கூறினார்.
தமிழில் எழுதப் படிக்க தெரிந்தவர்களின் தொடங்கி, பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை பதிவு செய்யக் கூடிய சிறந்த அரசாங்க வேலைகளை நமது தமிழ் உறவுகளுக்காக தமிழ்மொழியில் தினமும் வழங்கி வருகிறோம்.
உங்கள் ஆதரவு எங்களுக்கு தொடர்ந்து தேவைப்படுகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம், ஒரு வாட்ஸ்அப் குரூப்பிலாவது இதை பகிர்ந்து பிறருக்கும் நன்மை செய்து, தமிழக வேலையைப் தமிழனுக்கே பெற்றுத்தர உதவிக்கரம் நீட்டுவோம்.