இந்த AAICLAS நிறுவனத்தின் மூலம் புதிய செக்யூரிட்டி வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, (Assistant – Security) எனும் இந்த பணியிடத்திற்காக மொத்தம் 436 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுன, இது இந்தியா முழுக்க பல மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது, நாம் சென்னையில் உள்ள வேலை வாய்ப்பு பற்றி தான் இதில் பார்க்க உள்ளோம்.
ஆம் இது மூன்று வருடத்திற்கு (On 3 Years Term Engagement Contract.) ஒப்பந்த அடிப்படையில் வழங்கக்கூடிய பணியாக இருந்தாலும் வருடா வருடம் ஊதியம் உயர்த்தி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த வேலைக்கு மிக சுலபமாக நீங்கள் விண்ணப்பிக்க முடியும், மூன்று வருடத்திற்கான சிறந்த சேவையில் ஈடுபட தயாராக உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
அதோடு பன்னிரண்டாவது (12th) வகுப்பு முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பம். ஆகையால் இந்த AAICLAS Assistant(Security) வேலை சம்பந்தமான தெளிவான விளக்கங்களை தமிழ் மொழியில் வழங்க உள்ளோம், வாருங்கள் கட்டுரையில் பாருங்க இணைக்கலாம்.
குறுகிய மற்றும் விரிவான விளக்கம்: 3 வருட ஒப்பந்தத்தில் AAICLAS இல் உதவியாளராக (பாதுகாப்பு) வேலைவாய்ப்பு. இந்தியா முழுவதும் 436 காலியிடங்கள். கடைசி தேதி: 15.11.2023. சம்பளம்: 1ம் ஆண்டு 1 – ரூ. 21,500, 2ம் ஆண்டு – ரூ. 22,000, 3ம் ஆண்டு – ரூ. 22,500. தகுதி: 12ம் வகுப்பு, வயது 27க்கு கீழ். வேலை விமான நிலைய செயல்பாடுகளை உள்ளடக்கியது.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500 பொது/ஓபிசி, ரூ. SC/ST, EWS மற்றும் பெண்கள் வேட்பாளர்களுக்கு 100. கடைசி தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். மேலும் விவரங்களுக்கு, அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது hr.recruitment@aaiclas.aero ஐ தொடர்பு கொள்ளவும்.
ENGAGEMENT ADVERTISEMENT NO. 10 OF 2023
Engagement of personnel at AAI Cargo Logistics and Allied Services Company Limited (AAICLAS) as Assistant (Security) on 3 Years Term Engagement Contract. (ENGAGEMENT ADVERTISEMENT NO. 10 OF 2023).
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.11.2023
21,500/- To 22,500/-
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 436
அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/பல்கலைக்கழகம்/நிறுவனத்திலிருந்து 12வது, பொதுப்பிரிவினருக்கு 60% மதிப்பெண்களும், SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 55% மதிப்பெண்களும்.
01.10.2023 தேதியின்படி 27 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
இந்த வேலை செய்யக்கூடிய இடம் சம்பந்தமான விவரங்கள் கீழே:
இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் இந்த வேலை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வேலையின் பெயரை பொறுத்த அளவு கட்டுரையின் ஆரம்பத்தில் கூறியது போல் உதவியாளர் மற்றும் பாதுகாப்பு, இருந்தாலும் கூடுதல் விவரங்கள் கீழே:
- பதவியின் பெயர்: உதவியாளர்(பாதுகாப்பு)
- மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 436
போஸ்டிங் இடம்: இந்தியா முழுவதும் (சென்னை, கொல்கத்தா, கோவா, கோழிக்கோடு, வாரணாசி, ஸ்ரீநகர், வதோதரா, திருப்பதி, விசாகம், மதுரை, திருச்சி, ராய்ப்பூர், ராஞ்சி, புவனேஸ்வர், போர்ட் பிளேர், அகர்தலா, குவாலியர், அமிர்தசரஸ், லே, டேராடூன் , புனே, இந்தூர், சூரத்).
கவனிக்க: நிர்வாகத்தின் விருப்பப்படி இந்தியாவில் உள்ள எந்த இடத்திற்கும் பணியாளர்கள் மாற்றப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது, முக்கியமாக இந்த கட்டுக்கோப்பிற்கு இணங்காதவர்கள் மற்றும் விருப்பமில்லாதவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு அனுமதிக்கப்பட்ட இடங்களில் எல்லாம் முன்பதிவுகள் நடக்கும் விதிகளின் அடிப்படையில் மற்றும் செயல்பாடு தேவைகளின்படியும் 30 சதவீத காலிப்பணியிடங்கள் மாறுபடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
(AAICLAS) as Assistant (Security) ஊதியம் எவ்வளவு?
ஊதியத்தைப் பொறுத்தவரை கட்டுரையில் ஆரம்பத்தில் கூறியது போல் மூன்று வருடங்களுக்கும் ஊதியம் உயர்த்தி வழங்கப்படும், அது சம்பந்தமான விவரங்களுக்கு கீழே பாருங்கள்.
முதல் ஆண்டு | ரூ. 21,500/- |
இரண்டாம் ஆண்டு | ரூ. 22,000/- |
மூன்றாம் ஆண்டு | ரூ. 22,500/- |
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்ப கட்டணங்களுக்கான விவரங்களின் பட்டியலுக்கு கீழே பார்க்க முடியும், அதில் ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனி அளவுகள் குறிப்பிடப்பட்டுள்ளது:
- பொது/ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 500/-
- SC/ ST, EWS & பெண்கள் வேட்பாளர்களுக்கு ரூ. 100/-
கவனிக்க: இந்த கட்டண சலுகையை பெற தகுந்த அதிகாரியால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 12ஆவது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மேலும் பொது பிரிவினர் 60% மதிப்பெண்களும், எஸ்சி/எஸ்டி பிரிவினர்களுக்கு 55 சதவீத மதிப்பெண்கள் கேட்கப்பட்டுள்ளது.
குறிப்பு: ஆங்கிலம்/ஹிந்தி மற்றும் அல்லது உள்ளூர் மொழியை படிக்கும் மற்றும் பேசும் திறனை கொண்டிருக்க வேண்டியது அவசியம். நாம் சென்னையில் உள்ள (AAICLAS) as Assistant (Security) வேலைக்கு விண்ணப்பிக்க தயாராவதால் தமிழில் படிக்கவும் எழுத பேசவும் தெரிந்திருந்தால் போதுமானது.
(AAICLAS) as Assistant (Security) வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
இந்த விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும், சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள் 15/11/2023 அல்லது அதற்குள் நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பியுங்கள். விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு கட்டுரைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது, அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மேலும் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் மின்னஞ்சல் மூலமாக அல்லது தொலைபேசி எண் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம், (ன்னஞ்சல் ஐடியில் தொடர்பு கொள்ளவும் – hr.recruitment@aaiclas.aero அல்லது ஹெல்ப் டெஸ்க் எண் 011-24667713) நம் சென்னையில் இருக்கும் அலுவலகத்தின் விலாசமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது பார்த்த பயன்பெறுங்கள்.
AAI CARGO LOGISTICS & ALLIED SERVICES COMPANY LTD
- முகவரி: ஒருங்கிணைந்த விமான சரக்கு வளாகம், மீனம்பாக்கம், சென்னை விமான நிலையம், சென்னை– 600 027
- டெலிஃபாக்ஸ்: 044 2256 0581
- தொலைபேசி: 044 22560431 / 5928 (+91-94-4439-4026)
- மின்னஞ்சல்: cs@aaiclas.aero
வயது வரம்பு:
இதனை பொறுத்தவரை 1/10/2023 தேதியின் அடிப்படையில் 27 வயதுக்கு மிகையாகாமல், அதாவது அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய குறிப்பு:
விமானநிலையத்தில் செயல்படும் பணிகளுக்கான உதவி, மற்றும் பயணிகளின் சாமான்களைக் கையாள்வதற்கான உதவி, பொருட்களை ஏற்றுதல் மற்றும் இறக்குதல் அல்லது அவ்வப்போது ஒதுக்கப்படும் பிற பல்பணி செயல்பாட்டு வேலை நடவடிக்கைகள் ஆகியவை பணி விவரத்தில் அடங்கும்.
மேலும் கன்வேயர் பெல்ட் மற்றும் எக்ஸ்ரே இயந்திரத்தில் இருந்து சாமான்களை தூக்கும் பணியை உள்ளடக்கியது, எனவே அத்தகைய வேலையைச் செய்ய விரும்பாத விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை.
தமிழில் எழுதப் படிக்க தெரிந்தவர்களின் தொடங்கி, பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை பதிவு செய்யக் கூடிய சிறந்த அரசாங்க வேலைகளை நமது தமிழ் உறவுகளுக்காக தமிழ்மொழியில் தினமும் வழங்கி வருகிறோம்.
உங்கள் ஆதரவு எங்களுக்கு தொடர்ந்து தேவைப்படுகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம், ஒரு வாட்ஸ்அப் குரூப்பிலாவது இதை பகிர்ந்து பிறருக்கும் நன்மை செய்து, தமிழக வேலையைப் தமிழனுக்கே பெற்றுத்தர உதவிக்கரம் நீட்டுவோம்.