அறிவிப்பு: தமிழ்நாடு அரசு மூலம் வெளியிடப்பட்ட வேலை வாய்ப்புகளில் பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கக்கூடிய வேலை வாய்ப்புகளை பட்டியலிட்டுள்ளோம்.
ஆம் இந்த பகுதியில் உள்ள வேலை வாய்ப்புகளின் பட்டியலில் அரசாங்க வேலைகளுக்கு பெண்கள் மட்டும் தேவை எனும் வந்த அறிவிப்பின் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட தகவல்களும், அதற்கான விண்ணப்ப படிவம், மற்றும் கல்வித் தகுதி போன்ற அனைத்து விஷயங்களையும் நீங்கள் பார்க்கலாம்.
மேலும் அந்த தகவல் அனைத்தும் தமிழ் மக்களுக்கு உதவியாக இருக்கும் என்று கருதி உருவாக்கி இருக்கிறோம், முக்கியமாக தமிழ்நாட்டில் இருக்கும் மாவட்டங்களில் எந்தெந்த மாவட்டத்தில் பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க கூட வெளியே வேலை வெளிவந்துள்ளது என்பதை பற்றிய விளக்கங்களும், விண்ணப்பிக்கும் உதவியும் முழுமையாக உங்களுக்கு இந்த கட்டுரையில் கிடைக்கும். ஆகையால் தொடர்ந்து பயணித்து உங்களுக்கான வேலையை பாருங்கள்.
சேலம், திருநெல்வேலி, பெரம்பலூர், திருப்பூர், தூத்துக்குடி, கோயம்புத்தூர் போன்ற பல மாவட்டங்களில் வெளியிடப்பட்ட பெண்களுக்கான அரசு வேலைவாய்ப்புகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது, அவைகளை பொறுமையாக பார்த்து உங்களுக்கான வேலையை தேர்வு செய்யுங்கள்.
சேலம் மாவட்ட பெண்களுக்கான வேலைவாய்ப்பு:
சேலம் மாவட்டத்தில் உள்ள சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த வேலை வாய்ப்பு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வேலைவாய்ப்பு வழக்குப் பணியாளர் என்று தமிழில் பெயர் உண்டு, இதற்க்கு (3) மூன்று காலி பணியிடங்கள் உள்ளது. மேலும் 15/10/2023 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய விவரங்கள் கட்டுரையில் தெளிவாக காணுங்கள்:
சேலம் மாவட்ட சகி பெண்கள் வேலைவாய்ப்பு!
சம்பளம்: நேர்காணலில் தெரியும்
வேலை இடம்: சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில்
கடைசி தேதி: 15/10/2023
தூத்துக்குடி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் விண்ணப்பிக்க கூடிய வேலை!
தூத்துக்குடி மாவட்டத்தில் பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கும் இயக்க மேலாண்மை அலகிக்குட்பட்ட வட்டார இயக்க மேலாண்மை காலி பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் அடிப்படையில் பெண்கள் விண்ணப்பிக்கக்கூடிய வட்டார ஒருங்கிணைப்பாளர் காலி பணியிடங்கள் காலியாக உள்ளது, இதற்கு 12,000/- ரூபாய் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அது சம்பந்தமான விவரங்களை கீழே பாருங்கள். மேலும் இது கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் பகுதியில் கிடைக்க உள்ள வேலை என்பது குறிப்பிடத்தக்கது:
தூத்துக்குடி மாவட்ட வட்டார இயக்க மேலாண்மை காலி பணியிடங்கள்!!
சம்பளம்: Rs. 12,000/-
வேலை இடம்: கோவில்பட்டி & விளாத்திகுளம்
கடைசி தேதி: 25/10/2023
பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கோயம்புத்தூர் மாவட்ட அரசு வேலைவாய்ப்புகள்!!
எட்டாம் (8th) வகுப்பு படித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கக்கூடிய கோயம்புத்தூர் மாவட்ட பெண்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது! இது கோயம்புத்தூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பல்வேறு காலில் பணியிடங்களை கொண்ட அறிவிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
ஆம், இந்த அறிவிப்புக்கு பல காலிப் பணியிடங்கள் உள்ளது, மேலும் 6,400/- முதல் 30,000/- வரை ஊதியம் தரக்கூடிய பல வேலை வாய்ப்புகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே கோயம்புத்தூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பணிபுரியும் வேலைவாய்ப்பை கட்டாயம் பெற்றெடுங்கள், அது சம்பந்தமான விவரங்கள் கிழே:
கோயம்புத்தூர் மாவட்ட மைய நிர்வாகி, மூத்த ஆலோசகர், வழக்கு பணியாளர், ஐடி நிர்வாகி, பாதுகாப்பு, பல்நோக்கு உதவியாளர் வேலைவாய்ப்புகள்!!
சம்பளம்: Rs. 6,400/- To 30,000/-
வேலை இடம்: கோயம்புத்தூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில்
கடைசி தேதி: 31/10/2023
அரசு வேலைகளில் பெண்களுக்கு முக்கியத்துவம் உண்டா?
கட்டாயம் உண்டு! ஒவ்வொரு அரசு பணியிலும் தமிழக அரசு பெண்களுக்கு என்று தனி முக்கியத்துவத்தை கொடுத்து வருகிறது.
அதிலும் நிரந்தரமான பணி மற்றும் ஒப்பந்த அடிப்படையில் செய்யக்கூடிய பணி என்று அனைத்தையுமே பெண்களுக்கு என்று தனியாக முக்கியத்துவத்தை நீங்கள் பார்க்க முடியும்.
மேலும் அவ்வாறு வெளியிடப்படும் அறிவிப்பை நாங்களும் தெளிவான முறையில் உங்களுக்கு தமிழ் மொழி தொகுத்து வழங்குவோம் என்று உறுதி அளிக்கிறோம். ஆகையால் கவலையின்றி எங்கள் உதவியுடன் உங்களின் பணியை தேடுங்கள்!
தமிழில் எழுதப் படிக்க தெரிந்தவர்களின் தொடங்கி, பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை பதிவு செய்யக் கூடிய சிறந்த அரசாங்க வேலைகளை நமது தமிழ் உறவுகளுக்காக தமிழ்மொழியில் தினமும் வழங்கி வருகிறோம்.
உங்கள் ஆதரவு எங்களுக்கு தொடர்ந்து தேவைப்படுகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம், ஒரு வாட்ஸ்அப் குரூப்பிலாவது இதை பகிர்ந்து பிறருக்கும் நன்மை செய்து, தமிழக வேலையைப் தமிழனுக்கே பெற்றுத்தர உதவிக்கரம் நீட்டுவோம்.
Hi sir I am completing in 12th standard I have a job