இருசக்கர வாகனம் அரசு பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள புதுப்பட்டியில் சின்னகருப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார்.
இவரது நண்பர் திருப்பதி ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அச்சங்குளம் பகுதியில் வசித்து வந்துள்ளார்.
இவர்கள் இருவரும் கோவை மாவட்டத்தில் உள்ள வடக்கிபாளையம் பிரிவில் இருக்கும் நிறுவனம் ஒன்றில் ஆப்பரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளனர்.
இதில் திருப்பதியின் தாயார் ரங்கம்மாள் உடல்நலக்குறைவால் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வந்தது.
எனவே திருப்பதி தனது நண்பர் சின்னக்கருப்பன் உடன் ராமநாதபுரத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றார்.
இதில் சின்னக்கருப்பன் இருசக்கர வாகனத்தை ஓட்டியுள்ளார். அப்போது கோலார்பட்டி அருகே சென்று கொண்டிருக்கும்போது பழனியில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த அரசுப் பேருந்து எதிர்பாராதவிதமாக இவர்களின் இரு சக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சின்னக்கருப்பன், திருப்பதி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.
\இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அரசு பேருந்து ஓட்டுநர் மதன்குமாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழில் எழுதப் படிக்க தெரிந்தவர்களின் தொடங்கி, பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை பதிவு செய்யக் கூடிய சிறந்த அரசாங்க வேலைகளை நமது தமிழ் உறவுகளுக்காக தமிழ்மொழியில் தினமும் வழங்கி வருகிறோம்.
உங்கள் ஆதரவு எங்களுக்கு தொடர்ந்து தேவைப்படுகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம், ஒரு வாட்ஸ்அப் குரூப்பிலாவது இதை பகிர்ந்து பிறருக்கும் நன்மை செய்து, தமிழக வேலையைப் தமிழனுக்கே பெற்றுத்தர உதவிக்கரம் நீட்டுவோம்.