WhatsApp Group Join Now

Telegram Group Join Now

8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதித்த கத்தார் நீதிமன்றம்

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைதான 8 இந்திய கடற்படையை சேர்ந்த முன்னாள் அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதைத்து கர்த்தார் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை கேட்டு இந்தியா மிகவும் வேதனை அடைந்துள்ளது.

ஆம், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவர்கள் கைதான போதும், இந்த தகவல் செப்டம்பர் மாதம் தான் இந்தியாவுக்கு தெரிய வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது கத்தாரில் உள்ள ராயல் ஓமானி விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவருக்கு சொந்தமானது. இந்த நிறுவனமானது கத்தார் நாட்டு ஆயுதப்படைகளுக்கு பயிற்சிகளை வழங்கி வருகிறது. இந்தநிலையில் அங்கு பணியாற்றிய 8 இந்திரியர்களின் நிலை இது என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது இந்த நிறுவனத்தில் இந்தியாவை சேர்ந்த எட்டு முன்னாள் கடற்படை அதிகாரிகள் பணிபுரிந்தனர் (கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் பிரேந்திர குமார் வெர்மா, கேப்டன் சவுரப் வஷிஷ்ட், கமான்டர் அமித் நாக்பால், கமான்டர் புர்னேந்து திவாரி, கமான்டர் சுகுநகர் பகாலா, கமான்டர் சஞ்சீவ் குப்தா, கடற்படை வீரர் ராகேஷ்).

இவர்கள் பணியாற்றும் போது அந்த நாட்டுக்கு சொந்தமான அதிநவீன நீர்மூழ்கி கப்பல் குறித்த தகவலை இஸ்ரேல் நாட்டுக்கு வழங்கியதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த குற்றத்தை இந்தியா முழுவதும் மறுத்து வாதாடி வந்த நிலையில், அனைவரும் பத்திரமாக தாயகம் திரும்பி அழைத்து வரப்படுவார்கள் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்று வெளியான இந்த மரண தண்டனை தீர்ப்பை கேட்டு அனைவருமே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

முக்கியமான பல சட்ட போராட்டங்களை நடத்திய போதும் இந்த விசாரணையில் தற்போது எட்டு பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கியது மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக இந்தியா தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்குக்கு முழுமையான தீர்ப்பு வரும்வரை காத்திருப்போம் என்றும், மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவோம் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் வேலைவாய்ப்பு

இன்ற வேலையவாய்ப்பு
Tamilnadu Jobs Indian Army
TN Government Jobs Central Government Jobs
12th Pass Jobs 5th Pass Jobs
8th Pass Jobs Degree Pass Jobs
10th Pass Jobs Railway Jobs

Leave a Reply